இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 2 மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொழும்பு வர்த்தக வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் காலை 09.20 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்த போதிலும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
Reviewed by Author
on
May 04, 2022
Rating:
Reviewed by Author
on
May 04, 2022
Rating:


No comments:
Post a Comment