இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் வாசலில் போராட்டம்
அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 450 குடும்பத்தைச் சேர்ந்த 1419 இலங்கைத் தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இதில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைப்பதற்காக 147 வீடுகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள பெரும்பாலானவர்களின் வீடுகள், மிகவும் சேதம் அடைந்துள்ளதால் காலியாக உள்ள வீடுகளை மறுவாழ்வு முகாம் சிறப்பு தனி ஆட்சியர் அனுமதியுடன் தங்களது சொந்த செலவில் புனரமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அதில் பெரும்பாலான வீடுகளில் புதிதாக வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைக்கப்பட்டு அதில் தங்கி இருந்தவர்களை அப்புறப்படுத்தப் படுகின்றனர்.
இதனிடையே வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய பேகம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வரும் வீடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள வீட்டை சொந்த செலவில் புனரமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வீட்டை நேற்று திங்கட்கிழமை (2) வந்த ஐந்து இலங்கை தமிழர்களுக்கு ஒதுக்கி இவரை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் தொடர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் மக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் பணம் தராததால் முன்விரோதம் காரணமாக தங்களை அந்த வீட்டை விட்டு காலி செய்து வெளியே அனுப்பி விட்டதாகவும், பல வீடுகள் இன்னும் புனரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ள வீடுகளை ஒதுக்காமல் தங்களது வீட்டை மட்டுமே ஒதுக்கி குழந்தைகளுடன் வெளியே அனுப்பியதாக இலங்கை பெண் குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதே போல் தனி வீடு மற்றும் தனி பதிவு கேட்டு கடந்த திங்கட்கிழமை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் வாசலில் போராட்டம்
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment