அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா
தமிழின வரலாற்று அடையாளமானதும் தேவார பாடல் பெற்ற தலமுமான மன்னார் மாதோட்ட நன்நகரில் அமையப்பெற்றதுமானா அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா
------------------------------
மஹாலிங்கத் தலமாகிய திருக்கேதீச்சநாதர் திருக்கோயிலே நிகழும் சுபகிருது வருடம் ஆனித்திங்கள் உத்தர நட்சத்திர நன்னாளில் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
-------------------------------------------
கர்மாரம்பம்
சுபகிருது வருடம் ஆனித்திங்கள் 16ஆம் நாள் வியாழக்கிழமை (30.06.2022) பகல் 10.45 மணி முதல்
--------------------------------------------------------------------
எண்ணெய்க் காப்பு
சுபகிருது வருடம் ஆனித்திங்கள் 19ஆம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 21ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை (03.07.2022 முதல் 05.07.2022 வரை)
------------------------------------------------
மஹா கும்பாவிஷேகம்
சுபகிருது வருடம் ஆனித்திங்கள் 22ஆம் நாள் புதன்கிழமை காலை 09 மணி முதல் 10.30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்மலக்கின நன்முகூர்த்தத்தில் (06.07.2022) நடைபெறும்
#
மஹா கும்பாவிஷேகத்தை தொடந்து 7.7.2022 வியாழக்கிழமை தொடக்கம் 48 நாட்களுக்கு திருவிழா நடைபெற்று .. இறுதியாக ,, 23.08-2022 அன்று செவ்வாய்கிழமை 'மகா மண்டல மஞ்சனம் நடைபெறும் ...
-தினமும் வேத பாராயணங்களும் தமிழ் வேதத் திருமுறை இன்னிசையும் சிறப்பு சொற்பொழிவுகளும் நாட்டியாஞ் சலிகளும் நடைபெறும்
அமுத வெள்ள சிவானந்தத் தேன் பருகி உய்தி பெற, திருக்கேதீச்சர புண்ணிய திருத்தலம் சேர வாரீர்
அருள்மிகு கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா
Reviewed by Author
on
June 04, 2022
Rating:

No comments:
Post a Comment