கிடைக்காது – முடிவை அறிவித்தார் பிரதமர்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது என பிரதமர் தெரிவித்தார்.
இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தற்போது பல நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இவ்வருட இறுதிக்குள் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.
பொருளாதார மீட்சிக்கு தேவையான திட்டங்கள் என்னவென்பதை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கிடைக்காது – முடிவை அறிவித்தார் பிரதமர்!
Reviewed by Author
on
June 14, 2022
Rating:

No comments:
Post a Comment