இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
தற்போதைய நெருக்கடிக்கும், அது மேலும் தீவிரமடைவதற்கும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பில் திரவத்தன்மை கூடிய வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றமையே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.
வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் வங்கிக்கட்டமைப்பிடம் போதியளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மத்திய வங்கியானது ஏற்றுமதிகள் மூலமான வருமானத்திற்கு சில மட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையிருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
Reviewed by Author
on
July 31, 2022
Rating:
Reviewed by Author
on
July 31, 2022
Rating:


No comments:
Post a Comment