ஈராக் பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
மதபோதகர் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள், பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களை கைப்பற்றி அதிக ஆசனங்களை பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது தொடர்பில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது. இந்த நிலையில் மொஹட் அல் -சுடானியின் பெயர் பிரதமர் பதவிக்காக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு அல் சதருடைய ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து இதே போன்ற போராட்டத்தை நடத்தினர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு நாட்டில் ஏற்பட்ட ஊழல் மற்றும் வேலை வாய்ப்பின்மை தொடர்பாக பெரும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
Reviewed by Author
on
July 28, 2022
Rating:

No comments:
Post a Comment