ஆகஸ்ட் 1 நீதிமன்றில் ஆஜராக கோட்டாவுக்கு உத்தரவு!
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று அழைக்கப்பட்டபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் பிரதிவாதிகளான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீடிக்க உத்தரவிட்டது. அத்துடன் இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
ஆகஸ்ட் 1 நீதிமன்றில் ஆஜராக கோட்டாவுக்கு உத்தரவு!
Reviewed by Author
on
July 28, 2022
Rating:

No comments:
Post a Comment