அண்மைய செய்திகள்

recent
-

சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் Freer Gallery of Art அருங்காட்சியகத்தில் சோழ வம்சத்தை சேர்ந்த 1,000 வருடத்திற்கும் மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த சிலை தடுப்புப் பிரிவு போலீசார், 'நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலை போலியானது. 10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டுள்ளது.

 சோழர் காலத்து ஐம்பொன் சிலை 1959ம் ஆண்டுக்கு பிறகு திருடப்படவில்லை. 1929ம் ஆண்டுக்கு முன்பே சிலை திருடப்பட்டுள்ளது. 1929ம் ஆண்டு ஹாகோப் கெவோர்கியன் என்பவரால் திருடப்பட்டு வாஷிங்டன் டிசியில் உள்ள ஃப்ரீயர் அருங்காட்சியகத்திற்கு செம்பியன் மகாதேவி சிலை விற்கப்பட்டுள்ளது. கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை. ஏனெனில் 1929ம், ஆண்டுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு மாயமான சென்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றார்.


சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு! Reviewed by Author on July 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.