தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அலகப்பெரும
-இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட சஜித் அணியினர் கூட்டமைப்பிடம் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும விற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருமித்த ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும வெற்றி பெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை ,காணி அபகரிப்பு ,மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் காணி அபகரிப்பு ,உடனடியாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
-எனினும் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சஜித் அணியினர் எழுத்து மூலம் வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும வுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அலகப்பெரும
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment