சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஸ்தாபகர் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ, அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா
Reviewed by Author
on
August 15, 2022
Rating:

No comments:
Post a Comment