சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
இதுபற்றி “குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தீ விபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின் மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்திருக்கிறது . அதனுடன் தனித்துவ மரஅமைப்பு, உள்ளிட்டவற்றை கவனிக்கும்போது, தீயால் சேதமடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் வலுக்கிறது” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக கற்களால் பாலங்கள் அமைக்கப்படும். கலாசார மதிப்பு கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான, மரக்கட்டமைப்பில் உள்ளார்ந்த அறிவு மற்றும் புத்திச்சாலித்தனத்துடன், தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்து இருப்பதுடன், வளைவுகளுடன் கூடிய இந்த அளவு நீளத்துடன் மரப்பாலம் ஒன்றை அமைப்பது என்பது மிக கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “ஆற்றின் மீது அமைந்திருக்கும் கலை நுட்பம் வாய்ந்த மரத்தில் உருவான சீனர்களின் உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் வகையிலான கட்டமைப்பு ஒன்றை நாம் இழந்திருக்கிறோம்” என்று பெகிங் பல்கலை கழகத்தின் பழமையான கட்டமைப்பின் நிபுணர் சூ யிட்டாவோ [Su தெரிவித்துள்ளார்.
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
Reviewed by Author
on
August 08, 2022
Rating:

No comments:
Post a Comment