அடுத்த 6 மாதங்கள் மிகவும் கடினமானவை; இது நாம் அனுபவித்திராத காலமாக இருக்கும் -ஜனாதிபதி
அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்.
ஆனால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியும் அதற்கு உடன்படவில்லை என்றால் உங்களின் தீர்வு என்னவென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. அல்லது உங்கள் மாற்றுத் தீர்வு என்ன? இதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை, அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறுவதுதான். அதற்கு நாம் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அதை நாடாளுமன்றம் நிராகரித்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
ஆனால் எதிர்காலம் கண்டிப்பாக கடினமாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. முதல் 6 மாதங்கள் மிகவும் கடினம். இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும். நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் அந்த பொறிமுறைக்குச் செல்வதில் அர்த்தமில்லை. புதிதாக சிந்திப்போம்” என்றார்.
அடுத்த 6 மாதங்கள் மிகவும் கடினமானவை; இது நாம் அனுபவித்திராத காலமாக இருக்கும் -ஜனாதிபதி
Reviewed by Author
on
August 06, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment