நுரைச்சோலையில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அவதானித்து சோதனையிட்ட போது, 155 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா 78 பார்சல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; அந்த இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன , கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
நுரைச்சோலையில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Reviewed by Author
on
September 23, 2022
Rating:

No comments:
Post a Comment