மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் திருட்டு
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மனித உரிமைகள் சார்ந்து பணியாற்றி வரும் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் தற்போது தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தொடர்பான 100 நாள் செயல் முனைவை மன்னார் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகின்றனர்.
-இந்த நிலையில் கடந்த மன்னார் சாவட்காட்டு பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தின் அலுவலகம் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு,குறித்த அலுவலகத்தில் காணப்பட்ட சில ஆவணங்கள் புகைப்படக் கருவி (கேமரா) மற்றும் பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை (10) மன்னார் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் குறித்த அலுவலக CCTV கேமரா காட்சிகள் ஆராய்ந்த போது குறித்த இரண்டு நபர்கள் அலுவலகத்தில் இருந்த மேசை லாச்சிகளில் ஆவணங்களை தேடுவதும் கதவுகளை திறப்பதும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பெறுமதிமிக்க மடிக்கணினி, கணினிகள் மற்றும் பெறுமதிக்க பொருட்கள் இருந்தும் அவைகள் எதுவும் எடுத்துச் செல்லப்பட வில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் திருட்டு
Reviewed by Author
on
September 12, 2022
Rating:
Reviewed by Author
on
September 12, 2022
Rating:





No comments:
Post a Comment