மன்னார் பேசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கை மன்னார்; மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல்; மணல் திட்டில் வந்திறங்கினர்.
தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.
மன்னார் பேசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
Reviewed by Author
on
October 17, 2022
Rating:

No comments:
Post a Comment