மாணவியின் ஆடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியை- அவமானத்தில் தீக்குளித்த சிறுமி
இந்நிலையில், ஆசிரியை தன் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.
தகவல்களின்படி, சிறுமிக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பெண் கண்காணிப்பாளர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், தனது சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய ஆடைகளை கழற்றச் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.
ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் .
மாணவியின் ஆடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியை- அவமானத்தில் தீக்குளித்த சிறுமி
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment