கட்டணத்தை குறைக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் நிபந்தனை
எனினும் பயண கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவித்திருந்தனர். வாராந்தம் வழங்கப்படும் பெற்றோல் போதுமானதாக இல்லை என தெரிவித்து அவர்கள் கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்திருந்தார். இவ்வாறு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமாயின் பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
கட்டணத்தை குறைக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் நிபந்தனை
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment