திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன்!
இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்ததால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார்.
அதன் பின்னர் ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார்.
இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்து தந்தை , அவரை பார்க்க டெல்லிக்கு வந்தார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் பொலிஸில் புகார் செய்து உள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் இரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன்!
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment