வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடான பதிவுக்கு தற்காலிகமாக தடை
இதேவேளை, வீட்டுவேலை உள்ளிட்ட தொழில்களை தேடிச்செல்லும் இலங்கைப் பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்படும் வியாபாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர்கள் அடங்கிய குழுவொன்று ஓமானுக்கு சென்று இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
ஓமானில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சில வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் யுவதிகளையும் பெண்களையும் அந்நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா வீசா ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் உள்ள முகவர் நிறுவனங்களில் இவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு வயது மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வௌியானதும் குறிப்பிடத்தக்கது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடான பதிவுக்கு தற்காலிகமாக தடை
Reviewed by Author
on
November 11, 2022
Rating:

No comments:
Post a Comment