மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த சக மாணவர்கள்!
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஹயநத்நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த மாணவியின் வீட்டிற்கு அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் சென்றுள்ளனர். மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியின் வகுப்பில் படிக்கும் மாணவர்களும், 9ஆம் வகுப்பு மாணவர்களும் சென்றுள்ளனர். அங்கு வீட்டில் வைத்து அந்த மாணவியை சகமாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை மாணவன் வீடியோ எடுத்துள்ளான். பின்னர், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால், தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த மாணவி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் வெறொரு மாணவனை அழைத்துக்கொண்டு மீண்டும் மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளான். அங்கு மாணவியை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை மாணவர் சமூகவலைதளமான வாட்ஸ்-அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பொலிசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 மாணவர்களை கைது செய்தனர்.
மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த சக மாணவர்கள்!
Reviewed by Author
on
December 01, 2022
Rating:

No comments:
Post a Comment