வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திப்பு
மேலும் சிறந்த உறவுக்காகவும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியிலும் பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம். IMFஐ அணுகுவதற்கும், எங்கள் கடனை மறுசீரமைப்பதற்கும், எங்கள் EFFஐ விரைவில் பெறுவதற்கு விரைவில் குழுவிற்குச் செல்வதற்கும், எங்களை அனுமதிப்பதிலும், எங்களை எளிதாக்குவதிலும் முக்கியப் பங்காற்றிய உங்களுக்கும் திறைசேரிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை இராஜாங்கச் செயலாளர் என்டனி பிளிங்கன் பாராட்டியுள்ளார்.
காலநிலை நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், அதனை எதிர்கொள்ள இலங்கை சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா 240 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி மற்றும் கடன்களை வழங்கியதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கும், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் இருவரும் இணைந்து செயற்படுவதாகவும் எண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் சப்ரி, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்
.
.
வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திப்பு
Reviewed by Author
on
December 03, 2022
Rating:

No comments:
Post a Comment