அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் !
அத்துடன், அவர் தமது கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே வைப்பதற்கு போதிய நேரத்தைக்கூட பொலிஸார் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம்திகதி நள்ளிரவு 12.30க்கும் இடம்பெற்றுள்ள நிலையில், அவசர இலக்கத்துக்கு கிடைத்த அழைப்புக்கமைய, தாம் அவ்விடத்துக்கு சென்றதாக ஒஸ்டின் பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி தமது வீடு மற்றும் வீதியை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்த படி இருப்பதாகவும், குறித்த நபர் தமது வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அழைப்பை மேற்கொண்டவர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜன் முணசிங்க மீது டேனியல் சென்செஸ் என்ற பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அவர் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒஸ்டின் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் !
Reviewed by Author
on
December 05, 2022
Rating:

No comments:
Post a Comment