அண்மைய செய்திகள்

recent
-

உழவு இயந்திர விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு


நுவரெலியா – டொரிங்டன் தோட்ட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று(11) உயிரிழந்துள்ளார் அக்கரபத்தனை – கல்மோதர பகுதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 05ஆம் திகதி அக்கரப்பத்தனை டொரிங்டன் தேயிலை தொழிற்சாலையிலிருந்து மூவர் உழவு இயந்திரத்தில் உரம் ஏற்றிச் சென்றுள்ளனர்.

 பாலத்தை கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் குறித்த மூவரும் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் கடந்த 05 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் இன்று(11) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உழவு இயந்திர விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on December 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.