நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறப்பு!
கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிக்கையில் , தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளது.
இது தவிர ஏனைய இடங்களில் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக 50 புதிய அலுவலகங்கள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அதிகாரிகளிடம் கொடுத்து, தங்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறப்பு!
Reviewed by Author
on
January 29, 2023
Rating:

No comments:
Post a Comment