ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு – கிளிநொச்சியில் ஜனாதிபதி
ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அம்முப்படுத்தவுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.
நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை, விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் கிருமினாசினிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு – கிளிநொச்சியில் ஜனாதிபதி
Reviewed by Author
on
February 12, 2023
Rating:

No comments:
Post a Comment