அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அரசின் நடவடிக்கை தமிழர்களிற்கு ஏமாற்றமே - இந்துசமய பேரவை சுட்டிக்காட்டு

இந்திய அரசால் 100 கோடி செலவில் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தை இலங்கை அரசிடம் கையளித்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இந்துக்களுக்கு பெரும் சினத்தை ஏட்படுத்திவிட்டது.இவ்வாறு தெரிவித்தார் இந்து சமய பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன்.

 இது தொடர்பான அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:இந்தியா இந்த கையளிப்பை தாம் ராஜ தந்திர ரீதியில் மேற்கொண்டதாக மனநிறைவும் கொள்ளலாம்.இது தம்மை தாமே ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இலங்கை வாழ் இந்துக்கள் உறுதிபட நம்பவேண்டும்.1987 இல் மேற்கொண்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு தண்ணிகாட்டும் இலங்கை பெத்தப் போக்கை வர்ணிக்க இலங்கை வாழ் இந்துக்களிடம் வார்த்தைகள் எதுவும் இல்லாதிருக்கிறது.இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டு இருப்பதே 21ஆம் நூற்றாண்டில் அதிசயமாக அமைந்துவிட்டது.

இங்கு நடைபெறும் இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி நாங்கள் இந்திய அரசிடம் முறையிடுவது வீண் செயாலோ என்று தோன்றுகின்றது. இந்திய திருநாடு இலங்கை தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டியதன் கலாசார மண்டபத்தை உடனடியாக மீளப்பெற்று இனப்பிரச்சினை தீர்ந்தபின் அதிகார கையளிக்க வேண்டும்.என்கிறார் 




இந்திய அரசின் நடவடிக்கை தமிழர்களிற்கு ஏமாற்றமே - இந்துசமய பேரவை சுட்டிக்காட்டு Reviewed by Author on February 12, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.