மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு கருவாடு பதனிடுவதற்காக நிதி உதவி வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(28) மாலை கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய் கிராமங்களைச் சேர்ந்த இரு மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு கருவாடு பதனிடுவதற்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருவாடு பதனிடுதல் தொடர்பான திட்டமிடல் கருத்தமர்வு ஓய்வு பெற்ற மன்னார் மாவட்ட முன்னாள் கடற்றொழில் பணிப்பாளர் மெராண்டா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ  மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் 7 மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் 7 மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 மன்னார்  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு கருவாடு பதனிடுவதற்காக நிதி உதவி  வழங்கி வைப்பு.
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 29, 2023
 
        Rating: 
      
No comments:
Post a Comment