அண்மைய செய்திகள்

recent
-

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை பொலிஸில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

 சிசிடிவியை பரிசோதித்தபோது, ​​​​அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்! Reviewed by Author on March 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.