சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஆரம்பகல்வி உதவிப்பணிப்பாளர் திரு.ராபி அஸ்லாம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக அருட்தந்தை அனுஸியஸ்(OMI) ,மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் பிரின்ஸ் லெம்பேர்ட், மன்னார் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ஜோன் ரஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கயிறு இழுத்தல்,நீர் நிரப்புதல்,பலூன் உடைத்தல்,தடைதாண்டல்,மணப்பெண் அலங்காரம்,வினோத உடை போட்டிகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் பெற்றோருக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-
Reviewed by Author
on
March 04, 2023
Rating:

No comments:
Post a Comment