மன்னாரில் அரச காணியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்- தடுத்து நிறுத்த சென்ற அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்
சம்பவ இடத்தில் இலுப்பை கடவை பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதும் சம்மந்தப்பட்ட நபர் மீதோ சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீதோ எந்த சட்ட நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
மேலும் மணல் அகழ்வுக்கு பயன் படுத்தப்பட்ட வாகனங்களை கையகப்பட்டுத்த கூட பொலிஸார் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உரிய அனுமதி இன்றி காடுகள் பல மாதங்களாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அரச காணியில் மணல் அகழ்வும் இடம் பெற்றுள்ள நிலையில் இலுப்பைகடவை பொலிஸாரோ வனவள திணைக்களமோ எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
.
குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் காணொளி வெளியாகி உள்ளது.
மன்னாரில் அரச காணியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்- தடுத்து நிறுத்த சென்ற அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்
Reviewed by Author
on
March 04, 2023
Rating:

No comments:
Post a Comment