இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைப் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment