மன்னார் கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள், காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள் மற்றும் காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு இன்று புதன்கிழமை(10) காலை 9.0 மணியளவில் மன்னார் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற
குறித்த கருத்தமர்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-இதன் போது காணி தொடர்பாக ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன் பல்வேறு விளக்கங்கள் வழங்கினார்.
-இதன் போது காணி தொடர்பாக ஓய்வு நிலை காணி ஆணையாளர் குருநாதன் பல்வேறு விளக்கங்கள் வழங்கினார்.
குறிப்பாக காணி பிணக்குகள் ஏற்படும் போது எவ்வாறு அவற்றை இலகுவாக தீர்வு காண்பது குறித்து தெழிவூட்டப்பட்டது.
மேலும் காணி சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதோடு,வருகை தந்த அதிகாரிகள் தமது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டனர்.
மன்னார் கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள், காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு.
Reviewed by NEWMANNAR
on
May 10, 2023
Rating:

No comments:
Post a Comment