வெவ்வேறு விபத்துக்களில் குழந்தை உட்பட மூவர் பலி
வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
ரிதிமாலியத்த டி 01 கால்வாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா்
எனினும் இரண்டரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலும், தம்பகல்ல களுகஹராவ பகுதியில் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய புத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹான தெல்கந்த - ரத்னபிட்டிய பழைய கெஸ்பேவ வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 82 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெவ்வேறு விபத்துக்களில் குழந்தை உட்பட மூவர் பலி
Reviewed by Author
on
June 24, 2023
Rating:

No comments:
Post a Comment