கொழும்பில் இடம் பெற்ற கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழா-
கனேடிய கூட்டமைப்பின் 156 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கனடாவுக்கான இலங்கை தூதரகத்தில் வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தூதரகத்தில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தலைமையில் இடம்பெற்றது.
வரவேற்பு நிகழ்வில் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ் சந்துரூ பெர்ணாடோ அவர்களும் பௌத்த மத பிக்குவான வணக்கத்திற்குரிய பேமரத்ன தேரர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இராஜாங்க கல்வி அமைச்சர் அரவிந்தகுமார் அவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல நாடுகளின் இராஜதந்திரிகள், இலங்கையில் உள்ள அனைத்து நாடுகளினதும் தூதரக தூதுவர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இடம் பெற்ற கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழா-
Reviewed by Author
on
June 29, 2023
Rating:

No comments:
Post a Comment