இறைவனைத் தரிசிக்கச் சென்றவர் இறையடி சேர்ந்தார்
கதிர்காமத்தில் நடைபெறும் எசல திருவிழாவில் கலந்துகொள்வதற்காக யால சரணாலயத்தின் ஊடாக பாத யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவரை காட்டுயானை தாக்கியதில் அவர் நேற்று (13) மாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருகோணமலை மாதவிபுரத்தைச் சேர்ந்த 63 வயதான நீலகம்மா இராசதுரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யாத்ரீகர்கள் குழுவில் அவரது கணவர் மற்றும் உறவினர்களும் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அவரது சடலம் தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
June 14, 2023
Rating:
.jpeg)

No comments:
Post a Comment