மன்னாரில் இடம்பெற்ற சர்வதேச சூழல் பாதுகாப்பு தின நிகழ்வு
சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் கடந்த 29 ஆம் திகதி காலை 7.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை 'சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம்' மற்றும் 'பொலித்தீன்,பிளாஸ்ரிக் பாவனை ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வும், சவுத் பார் கடற்கரை துப்புரவு செயற்பாடுகளும் இடம் பெற்றது.
இதன் போது 170 சமுர்த்திப் பயனாளிகளையும், சூழல் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களையும் கொண்டு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், வழிப்படுத்தலிலும் நடாத்தப்பட்டது.
வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் 'சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம்' தொடர்பான கருத்துரையினை வழங்கினார்.
'பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனை' தொடர்பான கருத்துரையை மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் அவர்கள் வழங்கினார்.
பின்னர், சவுத் பார் மக்கள் ஒன்றிணைந்து தமது கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்களை சேகரித்து துப்பரவு செய்தனர்.
சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் மன்னார் நகர சபையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம்பெற்ற சர்வதேச சூழல் பாதுகாப்பு தின நிகழ்வு
Reviewed by Author
on
June 09, 2023
Rating:

No comments:
Post a Comment