முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்
இவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (28) முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பில் அனைவரும் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு நாளை (28) போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட
தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்
தலைவர் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது
Reviewed by Author
on
July 27, 2023
Rating:

No comments:
Post a Comment