அண்மைய செய்திகள்

recent
-

ஹர்த்தாலுக்கு அழைப்பு மன்னர் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி மனுவல் உதயச்சந்திரா

 வடக்கு கிழக்கு தழுவிய ரீதியாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க  தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.


 இன்று வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 வடக்கு கிழக்கு தழுவிய ரீதியாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதை குழிக்கு நீதி கோரி  இடம்பெற உள்ள  போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி மன்னார் மாவட்டத்தின்  அனைத்து தரப்பினரையும் அழைத்து நிற்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு 13வது திருத்தச் சட்டம் தொடர்பான, ஓ.எம்.பி மற்றும் நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை முன் வைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் மக்களுக்கான விமோசனத்தை தரப்போவதில்லை. 13   வது   திருத்தச் சட்டத்திற்கு மாறாக புதிய ஒரு திட்டம் வகுக்கப்படுவதையும் கண்டிக்கின்றோம்.

எனவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி க்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளை  வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் மேற்கொள்ள வடக்கு,கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எனவே மன்னார் மாவட்ட மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


ஹர்த்தாலுக்கு அழைப்பு மன்னர் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி மனுவல் உதயச்சந்திரா Reviewed by Author on July 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.