கொலை செய்தவர்களே தீர்ப்பு அளிக்கிறார்கள்
சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது.
அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று (27) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச கண் காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் என்பதே எங்களுடைய தொடர்ச்சியான வலியுறுத்தல்.
அதன் அடிப்படையில் தான் எங்களுடைய தொடர்ச்சியான கோரிக்கை அமைகிறது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கை என்பது நியாயமான ஒரு கோரிக்கையாக உள்ளது.
இங்கு கொலை செய்தவர்களே விசாரணை செய்வதும் தீர்ப்பளிப்பதுமான ஒரு நாடாக இலங்கை இருக்கிறது.
யார் கொன்றார்களோ, யார் எங்களுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தினார்களோ அவர்களே அதனை விசாரிப்பதும், அதற்குரிய தீர்ப்பு வழங்குவதற்கான ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது.
இங்கு நடந்த மனித படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அதாவது ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூட விசாரிக்கின்றவர்கள் அவர்களை காணாமல் ஆக்கியவர்கள்.
எனவே சர்வதேச விசாரணை என்பது தொடர்ச்சியான கோரிக்கை அது கட்சிக்கு அப்பால் வடக்கு கிழக்கிற்கு அப்பால் அனைத்து தமிழ் கட்சிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.
சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
Reviewed by Author
on
July 27, 2023
Rating:


No comments:
Post a Comment