வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்!
Reviewed by Author
on
July 25, 2023
Rating:

No comments:
Post a Comment