ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்
ரயில் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான ரயில் கட்டுப்பாட்டு அறையின் முயற்சிகளுக்கு எதிராக ரயில் சாரதிகள் குழுவொன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று ஆரம்பித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்தார்.
அத்துடன் இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படக்கூடும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்
Reviewed by Author
on
July 24, 2023
Rating:

No comments:
Post a Comment