அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்!

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று இடம்பெற்று வரும் நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட 222 பட்டங்களும், ஆறாவது அமர்வில் 58 உயர் பட்டங்கள் உட்பட 300 பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

இன்றைய அமர்வுகளில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீட பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த சித்த வைத்திய சத்திர சிகிச்சைமாணி பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்! Reviewed by Author on July 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.