மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை-9 மீனவர்கள் கைது.
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் கடற்பரப்பில் திடீரென கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் மன்னார் உப்புக்குளம் , பள்ளிமுனை யைச் சேர்ந்த தலா மூன்று மீனவர்கள் கொண்ட மூன்று படகுகளில் 9 மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை மடி யை பயன்படுத்தி கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை-9 மீனவர்கள் கைது.
Reviewed by Author
on
July 13, 2023
Rating:
.jpeg)
No comments:
Post a Comment