மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் :பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் அவர்களின் நெறிப்படுத்துதலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை (13) இடம்பெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காணி, விவசாயம், கல்வி, சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமாகவும் ,அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையை தடுப்பது சம்பந்தமாகவும், வாழ்வாதார உதவி திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான விடயங்கள் பற்றி கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
இப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்இபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் :பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.
Reviewed by Author
on
July 13, 2023
Rating:
Reviewed by Author
on
July 13, 2023
Rating:



.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment