மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு நிர்வாகத் தெரிவு-
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக தலைமன்னார் பங்குத் தளத்தின் பங்குத்தந்தை அருட்பணி ச.மாக்கஸ் அடிகளார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் ஆளுநர் தேர்வுக்கான வாக்களிப்பு இடம் பெற்றத்தில் 11 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களில் இருந்து மன்னார் பிரஜைகள் குழுவின் நிர்வாகத் தெரிவு பிரஜைகள் குழுவின் போசகரான மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி ச.மாக்கஸ் அடிகளார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர் தீன்,செயலாளராக ஓய்வு நிலை வங்கி முகாமையாளர் ச.செசாரியஸ் பெர்னாண்டோ,உப செயலாளராக அரச சார்பற்ற நிறுவனத்தின் இணைப்பாளர் கொ.தயாளராஜன்,பொருளாளராக இலங்கை தேசிய நிர்மானிய சங்கத் தலைவர் அ.அன்ரன் றேமன்ஸ் குரூஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு நிர்வாகத் தெரிவு-
Reviewed by Author
on
July 02, 2023
Rating:
.jpg)
No comments:
Post a Comment