யாழ். போதனாவிற்கு மைத்திரி விஜயம்
யாழுக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.
மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி, நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.
சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.
அதேவேளை இன்று காலையில் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கும் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தார்.
யாழ். போதனாவிற்கு மைத்திரி விஜயம்
Reviewed by Author
on
July 01, 2023
Rating:
Reviewed by Author
on
July 01, 2023
Rating:


No comments:
Post a Comment