13வது திருத்தச்சட்டம்ஊடாக தமிழர்களுக்கு தீவு கிடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை சாள்ஸ் எம்பி
இலங்கையில் நடைமுறையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (25) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
அப்படி ஒரு என்னப்பாட்டுக்கு அவர்கள் வருவார்களாக இருந்தால் அது முற்று முழுதாக இலங்கை படு பாதாளத்திற்கு தள்ளப் படுகின்ற ஒரு நிலமையாகத் தான் இருக்கும்.
தமிழர்கள் இயக்கங்கள், நாகர்களாக இலங்கையினுடைய தேசிய இனமாக பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உரித்து இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களினுடைய எண்ணக் கருக்களுக்கு அமைவாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவோ, கருத்துக் கணிப்பு ஊடாகவும் அவர்கள் விரும்புகிற ஆட்சி முறையில் இருக்கும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அது கூட முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எங்களைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக தமிழர்களுக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் போது அது தமிழர்களுக்கு தீர்வாக அமையாது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வின் கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு,அவரது கருத்தை எதிர்க்கிறேன்.என தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் அதன் பின்னணி,குருந்தூர் மலை விவகாரம் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.
13வது திருத்தச்சட்டம்ஊடாக தமிழர்களுக்கு தீவு கிடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை சாள்ஸ் எம்பி
Reviewed by Author
on
July 25, 2023
Rating:

No comments:
Post a Comment