கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய உறுதிமொழி-உண்ணாவிரதத்தை கைவிட்ட விவசாயிகள்
மட்டக்களப்பு விவசாய அமைப்புகள் வேளாண்மை செய்த சிவப்பு, வெள்ளை நெல்லை கொள்வனவு செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்க இருந்த சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம் கிழக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து கைவிட்டுள்ளதாக விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நாட்டு இன சிவப்பு, வெள்ளை மற்றும் போளை நெல்லினங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் அரசாங்கம் சம்பா நெல்லை மாத்திரம் கொள்வனவு செய்வதால் அதிகமாக வேளாண்மை செய்கையான ஏனைய நெல்களை கொள்வனவு செய்யயாததையிட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த நிலையில் அரசாங்கம் உற்பத்தி செய்த ஏனைய இன நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி இன்று கச்சேரிக்கு முன்பாக சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் (25) மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெற இருந்தமையால் அங்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட இருந்த விவசாயிகள் உள் நுழைய முடியாது கச்சேரியின் வெளி வாசலில் காத்திருந்த நிலையில் அங்கு வந்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் விவசாயிகளுடன் உரையாடி கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூட்டிச் சென்று பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் ஆளுநர் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நெல் கொள்வனவு தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

Reviewed by Author
on
July 26, 2023
Rating:

No comments:
Post a Comment