வவுனியா படுகொலை - சந்தேகநபர் கைது
வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக வவுனியா, நெடுங்கேணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணி தகராறில் ஏற்பட்ட மோதலின் போது அயலவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய அழகையா மகேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், காட்டுக்குள் தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்த நபரும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சில காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்ததாகவும், பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் இருப்பதாகவும், நெடுங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:
Post a Comment