வவுனியாவில் ரயிலுடன் பாரவூர்தி மோதி விபத்து
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் ரயிலுடன் பாரவூர்தி மோதி விபத்து
Reviewed by Author
on
July 23, 2023
Rating:

No comments:
Post a Comment